Home /trichy /

சிங்காரத்தோப்பு பகுதியில் விரைவில் மல்டி லெவல் பார்க்கிங்.. திருச்சியில் வாகன நெரிசலுக்கு விரைவில் தீர்வு..

சிங்காரத்தோப்பு பகுதியில் விரைவில் மல்டி லெவல் பார்க்கிங்.. திருச்சியில் வாகன நெரிசலுக்கு விரைவில் தீர்வு..

திருச்சியில்

திருச்சியில் மல்டிலெவல் கார் பார்க்கிங்..

Trichy Multilevel Vehicle Parking | திருச்சி மாநகராட்சி சார்பாக சிங்காரத்தோப்பு பகுதியில் 3 மாடி அடுக்கு கட்டிடம் வாகனம் நிறுத்துவதற்காக கட்டப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி மாநகரை பொறுத்தவரை சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் பிரதானமாக உள்ளது.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிங்காரத்தோப்பு என் எஸ் பி ரோடு பகுதியில் பல வணிக நிறுவனங்கள், சில்லரை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சிங்காரத்தோப்பு மற்றும் என்எஸ்பி ரோட்டில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் வாங்க வருவது வழக்கம். புறநகர் பகுதிகளில் இருந்து வருவோர் வாகனங்களை நிறுத்த இடமில்லாததால் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இதனால் அப்பகுதி முழுவதும் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

திருச்சி மக்கள் சிங்காரத்தோப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தற்போது WB Road பகுதியில் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் மாநகராட்சி சார்பாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்பட்டு வருகிறது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:  திருச்சியில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா - முழு விவரம்

இந்தப் பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதுடன், விபத்துகள் ஏற்படாமலும் தடுக்க முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து மாநகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது.. “திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மாநகராட்சி சார்பில் WB சாலையில் மூன்று மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 600 இருசக்கர வாகனங்களையும், 150 கார்களையும் நிறுத்த முடியும். மேலும் கடைகள் மற்றும் உணவகங்கள் இதில் அமைய உள்ளது எனவும் இந்த கட்டிடம் இன்னும் 4 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பொறியாளர் தெரிவித்தார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி