தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டை, ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரத்தை கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள மாதா ஆலயம், முக்கொம்பு உள்ளிட்ட 47 சுற்றுலா தலங்கள் உள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீரங்கத்துக்கு அருகே எம்.ஆர். பாளையம் பகுதியில் திருச்சி வன உயிரியல் பூங்கா அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அளித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் முந்தைய திமுக அரசின் ஆட்சிக்காலத்தின் பூங்கா அமைக்க முன்மொழியப்பட்டது. மேலும் இதற்கு வனப் பாதுகாப்புச் சட்டம் 1980இன் கீழ், காப்புக்காடு பகுதியில், வனச்சாரா செயல்பாடுகளுக்காக, வனத்துறையின் அனுமதி தேவைப்பட்டது. பின்பு அனுமதி பெற்று இதனை தொடர்ந்து பணிகள் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருச்சி உயிரியல் பூங்காவை மக்கள் பயன்பாட்டு கொண்டு வரும் வகையில் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த வன உயிரியல் பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது இது திருச்சி மட்டுமல்லாது, பெரம்பலூர் பகுதி மக்களுக்கும் பொழுதுபோக்கு மையமாக விளங்கும். இந்த திட்டத்திற்கான பணிகள், 2022 -23ஆம் நிதியாண்டிலேயே துவங்கும்.
இதையும் படிங்க: நான் அப்பாவ பாக்கனும்... சவுதியில் இறந்தவரின் உடலை மீட்டுத்தர கண்ணீர் விடும் அம்மாவும், மகளும்.
உள்கட்டமைப்பு வசதிகள்:
மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்திடம், இதுகுறித்த ஆவணங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது . மேலும் எம்.ஆர் பாளையம் காப்புக் காடுகள் பகுதியில், மான்கள் மற்றும் பாலூட்டி வகை விலங்குகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாகவே, இந்த பகுதியில் வன உயிரியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், இங்கு இருக்கும் விலங்குகளுக்கு போதுமான அளவில் தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது. 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு தேவையான அளவில், இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 2017ஆம் ஆண்டில் வனத்துறை சார்பில், ரூ. 2.3 கோடி செலவழிக்கப்பட்டு 5 இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்பட்டதுடன் 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருச்சி காவிரி மேம்பால பணிகள் காரணமாக தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்.
பூங்காவின் நுழைவுப் பகுதியில் வளைவு, சுற்றிலும் வேலி சித்திர வகையிலான தகவல் பலகைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த 5 போர்வெல்களில் இருந்து எடுக்கப்படும் நீர், இந்த திட்டத்திற்கு போதுமானதாக இருக்கும் .மேலும் தேவைப்பட்டால், அருகில் பாயும் உப்பாறு ஆற்றில் இருந்து நீர் பெறப்பட்டு, அதை நீர்த்தேக்க குளங்களில் சேமித்து பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களிடம் கேட்டபோது வன உயிரியல் பூங்கா அமைக்க ரூ.12 கோடியே 26 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் இருந்து உத்தரவு வந்த பின்பு அடுத்த கட்ட பணியாக நீலகிரியில் இருந்து சாம்பல் இன மான்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இது குறித்து சமூக ஆர்வலரிடம் கேட்டபோது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியில் வன உயிரியல் பூங்கா தொடங்குவதற்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு அதற்கான தொடக்கப் பணிகளும் தொடங்கப்பட்டது கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கும் மேலாக நீதி ஒதுக்கப்பட்டு வளைவு நுழைவாயில் அறிவிப்பு பலகைகள் , நீர்த்தேக்க தொட்டி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
காலப்போக்கில் அத்தனை திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் செலவழித்த அனைத்து தொகையும் தற்போது வீணாகி உள்ளது. பராமரிப்பின்றி பூங்கா களை இழந்து காணப்படுகிறது. வனத்துறை அதிகாரிகளும் இவற்றை கண்டு கொள்ளாமல் அலட்சியப் போக்கில் உள்ளனர். இதனால் வருங்காலங்களில் சரியான நிதி ஒதுக்கீடு செய்து திருச்சி வன உயிரியல் பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy