1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி வயலூர் எனப்படும் தற்போதைய குமரவயலூரில் தைப்பூசத்தன்று அதிகாலை முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுப்பிரமணிய முருகன் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
செவ்வாய் தோஷம் (நாக சர்ப்ப தோஷம்) உள்ளவர்கள் இக்கோவிலில் உள்ள திருக்குளத்தில் மூழ்கி முருகனைத் தரிசித்தால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையிலும், நோய் நீங்கும், துன்பம் நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், ஆயுள் பலம் கூடும், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் உள்ளிட்டவை செழிக்கும் என்ற நம்பிக்கையில் இத்தலத்தில் பக்தர்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்தபோது, கோயில் இருக்கும் இடத்தில் ஒரே கணுவில் 3 கிளையுடன் வளர்ந்து நின்ற கரும்பு ஒன்றை கண்டுள்ளார். அதனை ஒடித்துத் தாகம் தீர்க்க முயன்றபோது, ஒடித்த இடத்தில் ரத்தம் கசிந்ததாகவும், அவ்விடத்தை தோண்டிப்பார்த்தபோது சிவலிங்கம் இருப்பதை கண்டு அங்கு கோயில் எழுப்பியதாக கர்ணபரம்பரை செய்தி கூறுகிறது.
தல புராணம் :
திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் “முத்தைத் திரு” பாடியபின்பு “வயலூருக்கு வா” என்று முருகன் சொல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்ததாகவும்,இங்கு முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார் எனவும் தலபுராணம் கூறுகிறது.வயலூரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் கிருபானந்த வாரியார்.
நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே அவர் தனது சொற்பொழிவை தொடங்குவார். அத்தகைய சிறப்பு கொண்ட வயலூர் முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருகிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இங்கு வரும் பக்தர்கள்,முடி இறக்கி, காது குத்தி, காவடி எடுத்து, பால் குடம் தூக்கி, விரதம் இருந்து, உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம் செய்து, பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றி வருகின்றனர்.தவிர எழைகளுக்கு அன்னதானம் செய்து, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தியும் முருகனை வழிபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy