திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது திருப்பைஞ்ஞீலி. இந்த ஊரில் உள்ள நீல வனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கிவரும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை பகல் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை திருடுவது மற்றும் பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களை அவ்வப்போது மிரட்டும் குரங்குகள் மாலை நேரங்களில் கூட்டம், கூட்டமாக வீதிகளில் சுற்றி திரிகிறது.
மேலும், திறந்து இருக்கும் வீடுகளில் நுழையும் குரங்குகள் அங்கு சமையலறையில் வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் தக்காளி, வாழைப்பழம், காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் குரங்குகள் எப்போது வீட்டுக்குள் நுழையுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
இதையும் படிங்க : புத்தாண்டை முன்னிட்டு மதுரை மல்லி ரூ.1800க்கு விற்பனை..
மேலும், பெண்கள் 100 நாள் வேலைக்கு செல்லும் நேரங்களில் வீட்டை பூட்டி விட்டு செல்லும்போது குரங்குகள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று பொருட்களை நாசப்படுத்தி விட்டு செல்கின்றன. வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளை கடிக்க வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே, வனத்துறை அதிகாரிகள் திருப்பைஞ்சீலியில் சுற்றித் திரியும் ஏராளமான குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy