ஹோம் /திருச்சி /

திருச்சியில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீர் - அகற்ற மேயர் நடவடிக்கை

திருச்சியில் குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீர் - அகற்ற மேயர் நடவடிக்கை

திருச்சி

திருச்சி

Trichy District | திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக  கோரையாறு, அரியாறு மற்றும் குடமுருட்டி வாய்க்காலில் பகுதிகளில் இருந்து வெள்ள நீர் புகுந்து எடமலைப்பட்டி புதூர், அம்மையார் பிள்ளை நகர்,எம்.எம்.நகர், உறையூர் ஆகிய பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோரையாறு, அரியாறு மற்றும் குடமுருட்டி வாய்க்காலில் பகுதிகளில் இருந்து வெள்ள நீர் புகுந்து எடமலைப்பட்டி புதூர், அம்மையார் பிள்ளை நகர்,எம்.எம்.நகர், உறையூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கின.

திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் லிங்கம் நகர், பாத்திமா நகர், எ.யூ.டி. நகர் ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இந்த பகுதிகளில் மழை நின்ற பின்னரும் தண்ணீர் வடிவதற்கு பல தினங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதேபோல் கோரையாறு, அரியாறு மற்றும் குடமுருட்டி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எடமலைப்பட்டி புதூர், அம்மையார் பிள்ளை நகர், எம்.எம்.நகர், உறையூர் ஆகிய பகுதிகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், நீர்வளத்துறை சார்பில் அரியாறு, கோரையாறு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைக்காலங்களில் வெள்ள நீர் புகுவதை தடுக்கவும், காலி மனைகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்தவும் மின்மோட்டார்கள் வாங்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக மேயர் மு.அன்பழகன் கூறும்போது, “முதற்கட்டமாக தற்போது 16 மின்மோட்டார்கள் வாங்க இருக்கிறோம். அதில் 20 ஹெச்பி மோட்டார்கள் 6 வாங்கப்பட உள்ளது. இந்த மின்மோட்டார்கள் அதிகம் மழை நீர் தேங்கும் டோபி காலனி, கிருஷ்ணாபுரம், ராஜீவ்காந்தி நகர், செக்போஸ்ட், ஆதிநகர், எ.யூ.டி.நகர் ஆகிய பகுதிகளில் நிறுவப்பட உள்ளது. இந்த மின்மோட்டார் மூலம் ஒரு நிமிடத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும். அதேபோல் 10 ஹெச்பி மின்மோட்டார் மூலம் பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றலாம்.

இந்த பகுதிகளில் மின்மோட்டார்களை நிறுவுவதற்கு கான்கிரீட் தாளங்கள் அமைக்கப்படும். இந்த பணிகள் சில இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மின் மோட்டார்கள் பொருத்தும் பணிகள் பூர்த்தி செய்யப்படும்” என தெரிவித்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy