Home /trichy /

ஆன்மீக அறிவியலை பேசும் ‘மாயோன்’.. திருச்சிக்கு வந்த ரத யாத்திரை..

ஆன்மீக அறிவியலை பேசும் ‘மாயோன்’.. திருச்சிக்கு வந்த ரத யாத்திரை..

மாயோன்’

மாயோன்’ ரதம்

Maayon Movie: மாயோன் திரைப்பட குழுவினர் தமிழகம் முழுவதும் வாகனத்தில் ரத யாத்திரையாக சுற்றி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இன்று ஸ்ரீரங்கம் வந்தடைந்தது.

    தமிழர்களின் ஆன்மீகத்தையும். விஞ்ஞானத்தையும் இணைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'மாயோன்'. படம் ஆகும். இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளர். படக்குழுவினர், திரைப்பட பேனர் மற்றும் கிருஷ்ணர் சிலை வைத்து தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்று வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக, திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு இன்று மாயோன் ரதம் வந்தடைந்தது. மேலும் திருச்சியில் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளனர். பொதுமக்கள் கிருஷ்ணர் சிலை அருகே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

    இதுகுறித்து பட தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம் தெரிவித்ததாவது, “மாயோன் ரதம், தமிழகமெங்கும் யாத்திரையாக வலம் வந்துகொண்டு இருக்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாயோன் கிருஷ்ணரை வணங்கி, அருள் பெற்று வருகின்றனர்.
    மேலும் தமிழகத்தில் ஆன்மீக அறிவியலை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தின் சுவாரசியமான கதையாக இருக்கும்.
    மக்கள் மத்தியில் மாயோன் திரைப்படம் ஏற்படுத்தி இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வரும் ஜூன் 24ம் தேதி தமிழகம் மற்றும் உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது" என்றார்.

    செய்தியாளர் - என்.மணிகண்டன்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி