முகப்பு /திருச்சி /

ஆலத்துடையான்பட்டி மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலம்..!

ஆலத்துடையான்பட்டி மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலம்..!

X
ஆலத்துடையான்பட்டி

ஆலத்துடையான்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா

Mariyamman Temple Festival Alathudaiyanpatty : திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 2ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே ஆலத்துடையான்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் வைகாசி பெரு விழா நடைபெற்றது.

இத்திருவிழாவில் ஆலத்துடையான்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாரியம்மனின் அருள் பெற்றுக்கொண்டனர். மாரியம்மனுக்கு தீப ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்தார் கருப்புசாமி. அதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு கருப்புசாமியிடம் அருள் பெற்றுக்கொண்டனர்.

ஆலத்துடையான்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா

இதையும் படிங்க : ஒடிசா மாநில ரயில் விபத்து..! ஆன்மா சாந்தி அடைய காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்..!

இதனைத்தொடர்ந்து, மாலை நேரத்தில் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Religion18, Trichy