ஹோம் /திருச்சி /

இது பூங்காவா? மதுக்கூடமா? திருச்சி மரக்கடை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பூங்காவின் அவலம்..

இது பூங்காவா? மதுக்கூடமா? திருச்சி மரக்கடை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பூங்காவின் அவலம்..

திருச்சி

திருச்சி மரக்கடை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பூங்கா

Tiruchirapalli District News | திருச்சியில் பல மேம்பாலத்திற்கு கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது அது சரிவர பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாலக்கரை, மேலப்புதூர் மார்க்கெட், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பாலங்களின் கீழ்புறமாக பூங்காக்கள் அமைக்கப்பட்டு அது மாநகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மரக்கடை மேம்பாலத்திற்கு கீழ் இருக்கும் பூங்கா தற்போது மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் அருகில் இருக்கும் மதுக்கடையில் மதுபானம் அருந்தும் சிலர்  மதுபானங்களை வாங்கி வந்து பூங்காக்களில் அருந்துவதாகவும் பலர் அங்கேயே அசம்பாவித செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:  திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

இதே போல திருச்சி மாநகராட்சி பராமரிக்கும் மற்ற பூங்காக்களிலும் இதே நிலை தொடர்வதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காக்கள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் பூங்காக்களை சரிவர பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy