Home /trichy /

டெலிவரி பாய் டூ பிஸினஸ்மேன்... திருச்சியை கலக்கும் சாலையோர பன் பட்டர் கடை..

டெலிவரி பாய் டூ பிஸினஸ்மேன்... திருச்சியை கலக்கும் சாலையோர பன் பட்டர் கடை..

திருச்சி

திருச்சி பால் பண்ணை பன் பட்டர் கடை

Trichy Best Street Food | ஒரு உணவு விநியோக நிறுவனத்தில் டெலிவரி பாய் ஆக பணியாற்றி பின்னர் சொந்தக்காலில் நிற்க ஆசைப்பட்ட ஒரு சாமானியனின் பிஸினஸ் கனவு தான்  ‘மதுரை மணியின் எட்டாம் சுவை’ கடையாக நம் கண் முன்னே நிற்கிறது. திருச்சி பால் பண்ணை அருகேயுள்ள இந்த சாலையோர கடையில் என்னவெல்லை ஸ்பெஷல் என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சி பால் பண்ணை அருகே  ‘மணியின் எட்டாம் சுவை’ என்ற பெயர் பலகையுடன் இயங்கி வரும் சாலையோர தள்ளுவண்டி கடையில் இளைஞர்கள் கூட்டம் அதிகம் நிரம்பியிருந்ததை பார்க்க முடிந்தது. இந்த கடையில் 20 வகையான பன் பட்டர் சிற்றுண்டி வகைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஒரு உணவு விநியோக நிறுவனத்தில் டெலிவரி பாய் ஆக பணியாற்றி பின்னர் சொந்தக்காலில் நிற்க ஆசைப்பட்ட ஒரு சாமானியனின் பிஸினஸ் கனவு தான்  ‘மதுரை மணியின் எட்டாம் சுவை’ கடையாக நம் கண் முன்னே நிற்கிறது.

அதென்ன மதுரை மணி என்கிறீர்களா? அதுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் இருக்கு..

மதுரையில் இருந்து வேலைக்காக திருச்சிக்கு வந்தவர் மணி. தனது குடும்பத்துடன் பால் பண்ணை அருகே சிறிய அளவிலான ஒரு வீட்டில் வாடகைக்கு  குடியேறினார். தனது வாழ்வாதாரத்திர்காக தனியார் நிறுவனம் ஒன்றில் உணவு டெலிவரி பாய் ஆக வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். அச்சமயம், நாம் தொடர்ந்து ஒருவருக்கு கீழ் தான் வேலை செய்து வருகிறோம் ஏன் தனியாக ஒரு தொழில் தொடங்கக்கூடாது என சிந்தித்தார் அதன் வெற்றிதான் தற்போது இயங்கி வரும் மணியின் எட்டாம் சுவை கடை.. இந்த கடையில் என்ன ஸ்பெஷல்?

சாதாரண இரண்டு ரூபாய் பன்னில், 20 வகைகளில் விதவிதமான உணவுகளை தயாரித்து தருகின்றனர்.  குறிப்பாக கேரட் பன் அல்வா, பன் பால்கோவா, பன் திராட்சைபன், பட்டர் பன் இதுபோன்று மட்டும் அல்லாமல் கார வகையிலும் சில விதமான உணவுகளை தயாரித்து வருகிறார் .

இந்த கடையின் சிறப்பு அம்சமே மணி எட்டாம் சுவை காரம் என்ற வகை அயிட்டம் தான்.  விலையும் குறைவு, உணவும் தரமாக உள்ளது என்பதால் தினந்தோறும் வாடிக்கையாளர்கள் வட்டம் பெருகிக் கொண்டே செல்கிறது இவரின் கடைக்கு..

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதலில் மக்களின் வரவேற்பு இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல எங்களின் சுவை, விதவிதமான உணவு வகைகளை தரமாக கொடுத்ததன் அடிப்படையில் தற்போது வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.

ஒருவரிடம் கைகட்டி வேலைக்கு செல்ல விருப்பமின்றி இன்று அவரே ஒருவருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு சிறிய அளவில் வெற்றி கண்டிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி