ஹோம் /திருச்சி /

பட்டாசு வெடிக்கும் சந்தோஷத்தை வவ்வால்களுக்காக விட்டுக்கொடுத்த திருச்சி கிராமமக்கள்...

பட்டாசு வெடிக்கும் சந்தோஷத்தை வவ்வால்களுக்காக விட்டுக்கொடுத்த திருச்சி கிராமமக்கள்...

திருச்சி

திருச்சி

Trichy District Latest News | திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள சம்பட்டி கிராமத்தில் பலநூற்றாண்டு பழமை வாய்ந்த ஆரியபெருமாள் கோவில் மீது வளர்ந்துள்ள ஆலமரத்தில் பழம் திண்ணும் வவ்வால்கள் கூட்டம், கூட்டமாக வந்து குடியேறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராம மக்கள் வவ்வால்களுக்காக தீபாவளி மட்டுமல்ல எப்போதுமே பட்டாசு வெடிக்காமல்  பல ஆண்டுகளாகவே தங்களின் சந்தோஷத்தை தியாகம் செய்து வருகின்றனர்.

என்னதான் புத்தாடை அணிந்து இனிப்பு பலகாரங்கள் செய்து உண்டு மகிழ்ந்தாலும் பட்டாசு வெடித்தால்தான் அது தீபாவளி, அப்படியிருக்க தங்கள் கிராமங்களில் பட்டாசு வெடித்தால் பல ஆண்டுகளாக முகாமிட்டு இருக்கும் வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படும் என எண்ணி ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு இல்லா தீபாவளியை கொண்டாடுகின்றனர் இந்த கிராம மக்கள்

திருச்சிமாவட்டம். மணப்பாறையை அடுத்த சம்பட்டிகிராமத்தில் பல வருடங்களாக வெளவால் இனங்கள் முகாமிட்டு உள்ளது.

இந்த வவ்வால் இனங்களுக்காக தீபாவளி பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்காமல் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர். பொதுவாக வவ்வால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு  வவ்வால் தான்.

மேலும் படிக்க:  யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

இதனை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். வவ்வால் இனத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. பாலூட்டிகளிலேயே எலி போன்ற சிறிய முகம் (குறுமுகம்) உடையனவாகவும், அதிக பழவகைகளை உண்ணுபவையாகவும் உள்ளன. வவ்வால்கள் பகல் பொழுதுமுழுவதும் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னரே இவை உணவு தேடி உலாவஆரம்பிக்கும். இரவு நேரங்களிலேயே இவை உணவு உன்ன பல கிலோமீட்டர் தூரம்செல்லக்கூடியவையாகும்.

வவ்வால்கள் வாழும் ஆலமரம்

சம்பட்டி கிராமத்தில் பலநூற்றாண்டு பழமை வாய்ந்த ஆரியபெருமாள் கோவில் மீது வளர்ந்துள்ள ஆலமரத்தில் பழம் திண்ணும் வவ்வால்கள் கூட்டம், கூட்டமாக வந்து குடியேறியுள்ளது. ஆரம்பத்தில் வவ்வால்களின் வரவு அப்பகுதி மக்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் வவ்வால் கூட்டம் வந்தபிறகு அப்பகுதியில் மழை நன்றாக பெய்து விவசாயம் செழிப்படைந்ததால் வவ்வால்கள் தங்கள் பகுதிக்கு வந்ததால்தான் தங்கள் ஊர் சுபிட்ஷம் அடைந்ததாகவும் ஆரியபெருமாளே வவ்வாலாக வந்து ஊரைக் காப்பதாக மக்களிடையே நம்பிக்கைஏற்பட்டது.

மேலும் படிக்க:  சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!

தற்போது மரத்தில் சுமார் 10ஆயிரத்திற்கும் அதிகமான வவ்வால்கள் வாழ்ந்துவருகின்றன.இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வவ்வாலை தெய்வமாக கருதினர். இதனால் வவ்வால்களுக்கு எவ்விதஇடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தனர். வவ்வால்களை வேட்டையாமலும், வேட்டையாட வருபவர்களையும்தடுத்துவந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில் பட்டாசு வெடித்தால் வவ்வால்கள்பயந்து ஓடிவிடக்கூடும் என கருதிய பொதுமக்கள் அன்றிலிருந்து திபாவளிக்குக்கூட பட்டாசுகள்வெடிப்பதில்லை. வழக்கமாக தீபாவளிக்கு இனிப்பு வழங்குவதுடன் தீபாவளியைகொண்டாடிமுடிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக பட்டாசு சத்தமே எங்கள் ஊரில் கேட்டதில்லைஎன்கின்றனர் கிராமத்தினர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy