திருச்சி மாவட்டம் மணப்பாறை என்றாலே “மணப்பாறை மாடு கட்டி... மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு” என்று விவசாயம் செய்யச் சொல்லி வலியுறுத்திய நடிகர் திலகம் சிவாஜியின் பாடல் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் மாட்டுக்குப் பேர் போன ஊர் மணப்பாறை..
அதேபோல் திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வரிசையில் மொறுமொறு முறுக்குக்கு மணப்பாறை பெயர் பெற்றுத் திகழ்கிறது.
திருச்சிமாவட்டத்தில் உள்ள மணப்பாறை. திருச்சிக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவே அதிக கிராமப்புறங்களை உள்ளடக்கிய ஊர். பேருந்தில் சென்றால், அது எந்த நேரமாக இருந்தாலும் ஒரு பஸ்சில் அந்த ஊரில் ஏறும் பயணிகளை விட, முறுக்கு விற்பவர்களே அதிகமாக ஏறுவார்கள். பாதிபேர் தூங்காமல் மணப்பாறைக்காக காத்திருப்பார்கள், முறுக்கு வாங்குவதற்காக! முறுக்கு முறுக்கேய் முறுக்கு முறுக்கு முறுக்கேய்... மணப்பாறை முறுக்கேய்...என்கிற கரடுமுரடான குரல்களைக் கேட்டு தூங்குபவர்கள் கூட அடித்து பிடித்து எழுந்து விடுவார்கள்.
மேலும் படிக்க: சோழர்கள் தங்கைக்கு சீதனமாக கொடுத்த இடம் எப்படி சமயபுரம் கோவிலாக மாறியது.!
அந்த முறுக்கின் வண்ணமும் வாசமும் நம்மை சுண்டியிழுக்கும். சரி... ஒரு ரெண்டு பாக்கெட் வீட்டுக்கு வாங்கிட்டு போவோம் என்று வாங்குவோம். ஆனால் பாதி வழியிலேயே இன்னும் நாலஞ்சு பாக்கெட் வாங்கியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றி விடும். வகையில் இருந்த இரண்டு பாக்கெட்டில் இரண்டு முறுக்கை மட்டும் வழிக்குச் சாப்பிடுவோம் எனப் பிரித்து, அப்படியே ஒவ்வொன்றாக எடுத்து காலி செய்துவிடுவார்கள் அதுதான் மணப்பாறை முறுக்குச்சுவையின் வெற்றி ரகசியம்.
சீரகம், எள், பெருங்காயம் ஓமம், உப்பு அத்துடன்மணப்பாறை பகுதியில் நிலத்தடியில் இருந்து கிடைக்கும் லேசான உவர்ப்பு கலந்த தண்ணீரையும்சேர்த்து பிசைந்து அவற்றை சிறிது உலரவைத்து பின்பு கொஞ்சமாக வெண்ணெய் அல்லது நெய்சேர்த்து தயாரிக்கும் முறைதான் மணப்பாறை முறுக்கு,மணப்பாறை என்றதும் முறுக்கு ஞாபகத்துக்கு வருவதுடன் நம் கண்ணெதிரே வந்து, ஜாலம் காட்டும்.
மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!
அந்த நினைவே ஆசை மூட்டும். திண்டுக்கல்,பழனி, தேனி, பெரியகுளம், கொடைக்கானல்,குமுளி செல்பவர்களும், அண்டை மாநிலமான கேரளாசெல்பவர்களும் நள்ளிரவு நேரமானாலும் மணப்பாறையை நெருங்கும்போது அலாரம் வைத்தது போல் முழித்துக் கொள்வார்கள்.
கிட்டத்தட்ட கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே கோலோச்சிக் கொண்டிருக்கும் மணப்பாறைமுறுக்கு தற்போது தீபாவளி பண்டிகைக்காக கலைக்கட்டியுள்ளது. நாள்தோறும் தயாரிக்கப்படும்முறுக்கின் அளவைவிட தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக அதிகளவில் முறுக்குதயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகள் தீபாவளி பண்டிகைக்காக மக்கள் விரும்பிவாங்கி செல்லும் வகையில் பலவகையான வண்ணங்களில் முறுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: ராவணனின் மகன் பெயர் எப்படி திருச்சிக்கு சூட்டப்பட்டது? - சுவாரஸ்ய தகவல்கள்...!
பலவகைவண்ணங்களால் தயாரிக்கப்படும் முறுக்கு மற்ற நாட்களில் தயார் செய்யும் முறுக்கின்சுவையைவிட இன்னும் கூடுதலான சுவையை தரும் என்கின்றனர் வியாபாரிகள்.மேலும் அவர்கள் கூறுகையில், தீபாவளிக்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்படும் முறுக்கைமுன்கூட்டியே வாடிக்கையாளர்களும், வணிக நிறுவனத்தினர் தங்களது தொழிலாளாகளுக்கு கொடுப்பதற்காக ஆர்டர் கொடுத்து விடுவர். அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுக்கு அனுப்பிவைப்பதற்காகவும் ஆர்டர் கொடுக்கின்றனர் அவர்கள்விருப்பத்திற்கேற்ப நாங்கள் சுவையாக முறுக்கை தயார் செய்து தருகிறோம்.
அதேபோல் புதுமண தம்பதிகளுக்கு தீபாவளி சீர்வரிசையாக பலகாரமும் சேர்த்து கொடுப்பது வழக்கம், அதில் மணப்பாறை முறுக்கு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் இந்த வகையில் தற்போதும்தீபாவளி சீர். கொடுபபதற்காக முறுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தற்போது விலைவாசிஉயர்வால் முறுக்கு தயாரிக்க தேவைப்படும் அரிசி மாவு, எண்ணை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்து விட்டநிலையில் லாபத்தை குறைத்து வழக்கமான குறைந்த விலைக்கே தற்போதும்விற்பணை செய்து வருவதாக தெரிவித்த அவர்கள் தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இனிப்பு பலகாரம் மட்டும்மின்றி சுவையான மணப்பாறை முறுக்குடன் கொண்டாடுவதே சந்தோசம் எனத்தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Manaparai, Trichy