முகப்பு /செய்தி /திருச்சி / ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விரக்தி... திருச்சி இளைஞர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விரக்தி... திருச்சி இளைஞர் தற்கொலை..!

உயிரிழந்த வில்சன்

உயிரிழந்த வில்சன்

தற்கொலை செய்துகொண்ட வில்சன் கடந்த ஓராண்டு ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மணப்பாறை அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்த இளைஞர் வில்சன். இவர் கோவையில் உள்ள உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய வில்சன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்தம் கேட்டு உயிருக்கு போராடியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வில்சன் உயிரிழந்தார். ஓராண்டாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த வில்சன், அதற்கு அடிமையாகி விட்டதாகவும்,  கடன் வாங்கி ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க :  10 பெண்களுடன் தகாத உறவு... பிரபல நடிகரின் விவாகரத்துக்கு காரணம் இதுதானா? வெளியான தகவல்..!

2வது குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், வில்சன் மறைவு  அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் : ராமன் (மணப்பாறை)

First published:

Tags: Online rummy, Suicide, Trichy