திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரி பயிலும் மாணவர்கள் தினந்தோறும் இடைவேளையில் டீ, ஸ்நாக்ஸ் அருந்துவதற்கு அருகில் உள்ள கடைகளை தேடி செல்வார்கள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஒருவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே சாலை ஓரமாக சரியாக காலை 11 மணியிலிருந்து 11:30 மணி வரைக்கும் பப்ஸ் வெஜ் ரோல், எக் பாப்ஸ், ஸ்வீட் பாக்ஸ், கேக் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை விற்பனை செய்து வருகிறார். இங்கு விற்கப்படும் அனைத்து ஸ்நாக்ஸ் வகைகளும் மிகவும் சுவையாக இருப்பதாக கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
அதனாலேயே தினந்தோறும் சரியாக 11 மணியளவில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கடையை தேடி வருகின்றனர். மேலும் குறிப்பாக விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால்தான் தொடர்ந்து இங்கே வந்து வாங்கி செல்வதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அந்த கடை உரிமையாளரிடம் கேட்டபோது, “கடந்த 8 ஆண்டுகளாக திருச்சி மாநகரில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறோம். கல்லூரி மாணவர்களுக்கு இடைவெளி நேரங்களில் சுவையான வகை மற்றும் தரமாகவும் ஸ்நாக்ஸ் பொருட்களை எங்கள் கடையிலேயே தயாரித்து இங்கே கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம். இது மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு அடைந்துள்ளது.
தனக்கென்று ஒரு தனியாக பேக்கரி வைத்து அதில் 6 தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளம் வழங்கி நடத்தி வந்த இவர் சிறிதும் தன்னை உயர்வாக நினைக்காமல் நானும் ஒரு தொழிலாளி தான் என்று அந்த உணவு பேக்கரியிலேயே அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்வார். அதனைத்தொடர்ந்து தான் ஒரு கடைக்கு முதலாளியாக இருந்தாலும் நான் என்றும் ஒரு தொழிலாளி தான் என்று அவரே களத்தில் இறங்கி மாணவர்களுக்கு ஸ்நாக்ஸ் வகைகளை விற்பனை செய்து வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy