முகப்பு /திருச்சி /

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்பத் திருவிழா...

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தெப்பத் திருவிழா...

X
மலைக்கோட்டை

மலைக்கோட்டை தெப்ப திருவிழா.

Trichy News| மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் முக்கிய விழாவான தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது 

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் எனப்புகழ் பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் பங்குனி தெப்ப திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி கடந்த மார்ச் 26 ஆம் தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் தாயுமானவர் சுவாமி மட்டுவார்குழலம்மை சமேதராக தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் முக்கிய விழாவான தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . சுவாமி அம்பாள் கோவிலில் இருந்து புறப்பட்டு பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் காட்சியளித்தார். பின்னர் தெப்பம் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ”ஓம் நமச்சிவாயா” என்ற பக்தி கோஷத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Trichy