ஹோம் /திருச்சி /

கார்த்திகை தீபத்திற்கு தயாராகும் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்

கார்த்திகை தீபத்திற்கு தயாராகும் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்

X
திருச்சி

திருச்சி

Trichy Disitrict News : டிசம்பர் மாதம் 6ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உச்சிபிள்ளையார் கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தாயுமானர் சுவாமி கோயில் உள்ளது. மழையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

உச்சி பிள்ளையார் சன்னதி முன்பு கோபுரத்தில் உள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள மெகா சைஸ்திரி வைக்கப்பட்டு 900 லிட்டர் அளவில் எண்ணெய் ஊற்றி கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா வரும் 6ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கோயிலில் நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.

உச்சிப்பிள்ளையார் சன்னதியில் முன்பு பூர்வாங்க பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்துமெகா திரி தயாரிக்கும் பணி தாயுமானவர் சுவாமி கோயில் அருகே தொடங்கியது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : திருச்சியில் வாழ்ந்துள்ள கற்கால மனிதர்கள்... தடயங்கள் கண்டெடுப்பு...

இந்நிலையில், மெகா திரியை உச்சி பிள்ளையார் சன்னதி முன்பு இரும்பு கோபுரத்தில் உள்ள செப்பு கொப்பறையில் நிறுவும் பணி நடைபெற்றது. இதற்காக தாயுமானவர் சுவாமி கோயிலில் இருந்த மெகா திரியைகோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உச்சி பிள்ளையார் சன்னதிக்கு தூக்கி வந்தனர். அத்துடன் சுமார் 50 டன் என்னை கொண்டு வரப்பட்டு ஊற்றப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Karthigai Deepam, Local News, Trichy