Home /trichy /

அமேசான் பொருட்கள் டெலிவரி கிளையில் திருட்டு.. திருச்சியின் முக்கிய நிகழ்வுகள் தொகுப்பு!

அமேசான் பொருட்கள் டெலிவரி கிளையில் திருட்டு.. திருச்சியின் முக்கிய நிகழ்வுகள் தொகுப்பு!

திருச்சி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

திருச்சி மாவட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

அமேசான் பொருட்கள் டெலிவரி கிளையில் திருட்டு உள்ளிட திருச்சியின் முக்கிய நிகழ்வுகள் தொகுப்பு!

  மக்கள் காவல்துறையை பார்த்து பயப்பட வேண்டாம்.


  திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் காவலர்களான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தில் தலைமை தாங்கிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் இனி காவல் நிலையத்தில் குற்றவாளிகள் இறப்பு என்பது நடைபெறக்கூடாது. அதற்கான பயிற்சிகளை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். மக்கள் காவல்துறையை பார்த்து பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.


  முக்கொம்பு தடுப்பணை மத்திய இணை அமைச்சர் ஆய்வு.

  திருச்சி மாவட்டத்தின் முக்கொம்பூர் தடுப்பணையை ஆய்வு செய்த பிறகு மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் கூறியது
  ஜல் ஜீவன் திட்டத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வெறும், 12 சதவீதம் மட்டுமே பணிகள் நடைபெற்றுள்ளது.பணிகள் அனைத்தும் இன்னும் 3 மடங்காக வேகமாக நடைபெற்றால் மட்டுமே 2024ஆம் ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியும்.
  2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.தரமான குடிநீர் ஒவ்வொரு வீட்டுக்கும் போதிய அளவில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஜல் ஜீவன் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

  அமேசான் பொருட்கள் டெலிவரி கிளையில் திருட்டு.


  திருச்சி மாவட்டம் முசிறியில் அமேசான் பொருட்கள் டெலிவரி செய்யும் கிளை இயங்கி வருகிறது கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடையின் பூட்டை உடைத்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பொருட்களையும் சில மர்ம நபர்கள் திருடி சென்றனர் நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.

  மரம்-மழை- மகிழ்ச்சி என்ற தலைப்பில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம்.

  மரம்-மழை- மகிழ்ச்சி என்ற தலைப்பில் மர ஆர்வலர்களின் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஸ்ரீரங்கத்தில் இன்று தொடங்கியது.
  இன்றும், நாளையும் (22ம் தேதி) 2 நாள் நடைபெறும் இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கின் தொடக்க விழா இன்று ஸ்ரீரங்கம் கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது.

  துறையூர் அருகே கோவிலில் சிலை திருட்டு.

  துறையூர் அருகே கோவிலில் பிள்ளையார் சிலையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
  திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரம் அடுத்த ரெட்டியாபட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான காளகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது.

  இக்கோவிலில் சிறுநாவலூரைச் சேர்ந்த முருகேசன் (46) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார் . வழக்கம் போல நேற்றிரவு 7 மணிக்கு பூஜை முடித்து கோவிலைப் பூட்டி விட்டு சென்றவர் , இன்று காலை 8 மணிக்கு பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்த போது வெளிப் பிரகாரத்தின் முன்பு இருந்த சுமார் 1.5 அடி உயர விநாயகர் சிலை அங்கு இல்லாததையும், வெறும் பீடம் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதையறிந்த பூசாரி முருகேசன், இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிக்கு புகார் அளித்ததின் பேரில், கோவில் கணக்கர் செல்வராஜ் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.


  மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் அணிவகுத்து வந்த பிரமாண்ட சாமி சிலைகள்.அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்முச்சந்தி அருகே காரிய சித்தி தரும் ஆரிய பாப்பாத்தியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறும் நிலையில் முதல் நாள் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது. இதில் மணப்பாறை காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு பின் சாமி ஊர்வலம் புறப்பட்டது. மின்னொலியில் அலங்காரிக்கப்பட்ட தேர் பின்னே வர அதன் முன்னதாக காளி, அனுமன், சிவன், விஸ்ணு, சிங்கம் உள்ளிட்ட பிரமாண்டாமான 5 சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக சென்றது. செண்டைமேளம், மங்கள வாத்தியம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பிரமாண்டமாய் காட்சி அளித்த சாமி சிலைகள் சென்றதை அனைவரும் பார்த்து மகிழ்ந்ததுடன் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மணப்பாறையிலிருந்து புறப்பட்டு 7 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. பின்னர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது.


  வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ, ஆர்ஐ லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ ஆர்ஐ ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே கீழகல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தனது தந்தை நல்லையன் இறந்தது தொடர்பாக வாரிசு சான்றிதழ் கேட்டு மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக கல்பாளையம் VAOஇளவரசன் என்பவரும் மற்றும் RI முருகேசன் என்பவரும் ரூபாய் 12 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறோம் என மாணிக்கத்திடம் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணிக்கம் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று RI முருகேசனும் விஏஓ இளவரசனும் மாணிக்கத்திடம் லஞ்ச பணம் பெற்ற போது கையும் களவுமாக பிடிப்பட்டனர்.பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

  செய்தியாளர் - என்.மணிகண்டன்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி