Home /trichy /

குப்பையில் பிணமாக கிடந்த பெண் சிசு.. பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயற்சி - திருச்சி மாவட்ட செய்திகள்

குப்பையில் பிணமாக கிடந்த பெண் சிசு.. பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயற்சி - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.

திருச்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.

Trichy District: திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு...

  திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு...

  திருச்சி அரியமங்கலத்தில் குப்பையில் பிணமாக கிடந்த பெண் சிசு.

  திருச்சி அரியமங்கலம் அருகே கல்லாங்குத்து சாலையில் உள்ள குப்பை மேட்டில் பெண் சிசு ஒன்று பிணமாக கிடந்தது. மேலும் நாய்கள் அந்த சிசுவை கடித்து குதறியது அதை கண்ட அப்பகுதியினர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிறந்த சில மணி நேரமே ஆன அந்த சிசுவை வீசிச் சென்றது யார் கள்ளக்காதலில் பிறந்ததால் வீசி சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மாநகராட்சியில் குறைதீர் கூட்டம் 19 மனுக்கள் பெறப்பட்டன.

  திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
  மாநகரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 19 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர் .இதில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சாலை மேம்பாடு பாதாள சாக்கடை இணைப்பு சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு தெரு விளக்கு அமைக்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.

  ஓரத்தூர்: மாரியம்மன் கோவில் தேரோட்டம்

  புள்ளம்பாடி ஒன்றியம் ஓரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரைத் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
  தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  விபத்தில் மூதாட்டி பலி

  திருச்சி ஆம்னி பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காயம் அடைந்தார் அவரை உடனே திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயற்சி - வாலிபர் கைது.

  திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவரது மனைவி ரேவதி. வக்கீலான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது தென்னூர் மந்தை பகுதியில் அவரை பின்தொடர்ந்து வந்த சிரமம் தெப்பகுளம் தெருவை சேர்ந்த கோபிநாத் என்பவர் ரதியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை தடுக்க முயன்றுள்ளார் .இதுகுறித்து புகாரின் பேரில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  தூய்மை பணி சிறப்பு முகாம்

  தா பேட்டை பேரூராட்சி சார்பில் பொது சுகாதார தூய்மைப்பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் துணைத்தலைவர் மயில்வாகனன் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இதில் பிள்ளாதுரை, செவந்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

  50 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்.

  புள்ளம்பாடி அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்கள் மற்றும் ஆய்வுகள் கட்ட ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டிடப் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது இதற்கான விழாவிற்கு பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கினார்.

  திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை - கணக்கில் வராத 3லட்சம் ரொக்கம் பறிமுதல்.

  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது இந்த தொழில் மையத்தில் பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

  தொழில் தொடங்கவரும் தொழில் முனைவோர் இடம் அரசின் மானிய உதவி தொகை பெற்று தர அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் எழுந்ததுஇந்நிலையில் நேற்று மாலை திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி மேலாளர் கம்பன் ஆகியோரிடம் கணக்கில் இல்லாமல் இருந்து ரூபாய் 3 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன், திருவெறும்பூர்ல் உள்ள உதவி பொறியாளர் கம்பன் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இரு குழுக்களாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்
  சுந்தரபாண்டியன் எம்எல்ஏ கட்டிட பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார் விழாவில் புள்ளம்பாடி ஒன்றிய குழுத்தலைவர் ஒன்றிய செயலாளர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பிரதிநிதிகள் திமுக கட்சியினர் மற்றும் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டு இதற்கான ஏற்பாடுகளை புள்ளம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

  செய்தியாளர் - என்.மணிகண்டன், திருச்சி.
  Published by:Arun
  First published:

  Tags: Trichy

  அடுத்த செய்தி