முகப்பு /திருச்சி /

திருச்சி காவேரி பாலம் 5 மாதங்களுக்கு மூடல் - போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

திருச்சி காவேரி பாலம் 5 மாதங்களுக்கு மூடல் - போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நேற்று(சனிக்கிழமை) இரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி காவிரி பாலம் பழுதடைந்திருப்பதால் பாலத்தை பழுதுபார்க்கும் பணிக்காக நேற்று முதல் அடுத்த 5 மாதங்களுக்கு மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இதனால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆவதால் , மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை வருகின்ற 10.09.2022 சனிக்கிழமை இரவு 12 மணி முதல் கீழ்காணும் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பையாஸ் சாலை ( சென்னை திருச்சி – திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணா சிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ .1 . டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சியை அடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி, சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Trichy