முகப்பு /செய்தி /திருச்சி / ஏப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருச்சி மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஏப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறை... திருச்சி மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

Samayapuram Mariyamman Temple : திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வரும் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார்.  இதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், உலக பிரசித்திப் பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் தேர்வுகள் நடக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஊட்டி மலை ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கீங்களா? - செம அறிவிப்பு வந்திருக்கு!

மேலும், 19ம் தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20ம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25ம் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

top videos
    First published:

    Tags: Local News, Trichy