Home /trichy /

லால்குடி அரசு கல்லூரியில் 26ம் தேதி வரை சேர்க்கை- கலந்தாய்வை தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு

லால்குடி அரசு கல்லூரியில் 26ம் தேதி வரை சேர்க்கை- கலந்தாய்வை தவறவிட்டவர்களுக்கு வாய்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சி மாவட்டம் லால்குடியிலுள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சி மாவட்டம் குமுளூர் ஊராட்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்கை முகாம் நடக்கிறது. இந்த சேர்க்கையானது வரும் 26ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தும் கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 2022- 23 ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளநிலை பிஏ (தமிழ் ), பிஏ (ஆங்கிலம்), வரலாறு, பிபிஏ, பிஎஸ்ஸி, கணிதம், கணினிஅறிவியல், இயற்பியல், கணினி பயன்பாட்டியல்,
    தகவல் நுட்பவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான நேரடி மாணவா் சோ்க்கை சிறப்பு முகாம் நடக்கிறது.

    இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16 முதல் தொடங்கிய மாணவர் சேர்க்கையானது 26-ம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் ஆன்லைன் வழியில் விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறியவா்கள் மற்றும் கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெறாதவா்கள், இணையத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரில் வந்து விண்ணப்பித்து சோ்க்கை பெறலாம் என கல்லூரி முதல்வா் மாரியம்மாள் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி