திருச்சி மாவட்டத்தில் உள்ள திருத்தவத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது இக் கோயில். ஏழு முனிவருக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்று இத்தலத்திற்கு திருத்தவத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயிலின் 75 அடி உயரம் உள்ள மிகப் பழமையான மரத்தாலான திருத்தேரானது கடந்த 1918-ம் ஆண்டு செய்யப்பட்டது. 1936ம் ஆண்டுக்குப் பின்னர், 75 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர் புதுபிக்கப்பட்டு 2011 ம் ஆண்டு முதல் பங்குனி பெருவிழாவின் 9ம் நாளில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நிகழாண்டில் தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் விழா கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மார்ச் - 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 ம் தேதி வரை தினசரி காலை 7 மணிக்கு அம்பாள் பல்லாக்கில் புறப்படும் இரவு 7 மணிக்கு அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் லால்குடி, ஆங்கரை, மணக்கால், நன்னிமங்கலம், மும்முடி சோழமங்கலம், சாத்தமங்கலம், திருமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruchirappalli S22p24