Home /trichy /

ஒருபக்கம் வெள்ளம்.. மறுபக்கம் நிரம்பாத ஏரி, குளங்கள்.. விவசாயிகள் வேதனை..

ஒருபக்கம் வெள்ளம்.. மறுபக்கம் நிரம்பாத ஏரி, குளங்கள்.. விவசாயிகள் வேதனை..

திருச்சி

திருச்சி

Trichy Latest News : காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் குளங்கள் நிரம்பவில்லை  என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
திருச்சியில் காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தினால் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் கண்முன்னே வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் பாசனத்துக்கு பயன்படாத நிலை தான் உள்ளது.

காவிரி ஆற்றின் கிளைகளான புள்ளம்பாடி வாய்க்கால், உய்யகொண்டான் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் பிரதானமாக உள்ளது.  இவை தான் தங்களுக்கு பயனளித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 5 நாட்களாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சிறிதளவு கூட பயனில்லாமல் தண்ணீர் கடலில் கலந்து வருகிறது

இதனால் விவசாயிகள் முற்றிலுமாக ஏமாற்றம் அடைந்துள்ளனர் மேலும் பல்வேறு பகுதிகளில் தூர்வாரும் பணி நடந்தாலும் அது சரியான முறையில் நடைபெறவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 171 ஏரிகள் உள்ளன.  காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டவில்லை என்பது விவசாயிகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது . குறிப்பாக 113 ஏரிகளில் சுமார் 40 விழுக்காடு அளவில் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. 61 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். என்பது தெரிய வருகிறது .

இந்த ஆண்டு மே மாதம், முதலில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் திருச்சி மாவட்டத்தில் ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடாதது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி அதவத்தூர் பகுதியில் உயர் கொண்டான் ஆற்றின் குறுக்கேயும் புதிய கட்டளை வாய்க்கால் குறுக்கேயும் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவது தடைப்பட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டும் கரைகள் பலம் இல்லாமலும் இருப்பதுதான் இதற்கு ஒரு காரணமாக என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமாக நீர்வரத்து பாதைகளான வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி