திருச்சியில் பல ஆன்மீக தலங்களும் சிறப்பு அடையாளங்களும் இருந்தாலும் ஒரு பொழுது போக்கிற்கு சிறந்த இடமாக இருப்பது முக்கொம்பு அணை தான். திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் முக்கொம்பு அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜியபுரம் வழியாக முக்கொம்புவை சென்று அடையலாம். இதனுடைய சிறப்பினை பற்றி பார்ப்போம்..
கர்நாடகாவின் தலைகாவிரியாக உருவெடுத்து ஒற்றை காவிரியாக வரும் ஆறானது இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது. காவிரி ஆறு என்றாலே தனிச்சிறப்பு தானே...
ஆகாயத்தில் இருந்து பார்த்தால் மூன்று கொம்புகள் போன்று அமைந்திருக்கும். இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முக்கொம்பு மேலணை.
கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாக பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வடபுறம் வாத்தலையும் உள்ளன. காவிரியில் வரும் தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரியைக் காட்டிலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வந்தது. அதை தடுத்து முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசணத்துக்குப் பயன்படுத்தி முறைப்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து காவிரிப்பாசனப் பகுதி பொறியாளராக 1829இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் ஆறு அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணியானது 1834 ல் தொடங்கி 1836ல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1846இல் அணையின்மீது பாலம் உள்ளிட்டவை கட்டப்பட்டன.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முக்கொம்பு அணை செல்லும் பாதையை காட்டும் கூகுள் வரைபடம்..
அணையிலிருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. மேலும் வெள்ளக் காலத்தில் மட்டும் பெருகி வரும் நீரானது இவ்வணை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும், இவ்வணையும் சுற்றுலா இடங்களாகத் திகழ்கின்றன.
செய்தியாளர் - என்.மணிகண்டன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.