கரூர் மாவட்டம் தோகைமலையை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு ஸ்ரீரங்கம் பெருமாளே குலதெய்வமாக இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ரங்கநாதரை தரிசனம் செய்யும் கிராம மக்கள் பழமை மாறாது மாட்டு வண்டி கட்டி வருவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக திகழ்கிறது.
கிராம மக்கள்
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கரூரில் இருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி செல்வது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, 7 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தோகைமலை கிராம மக்கள் மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தனர். இந்த வருடம், கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தோகமலை ஒன்றியத்திலிருந்து கராணாம்பட்டி மையமாக வைத்து ஏழூர் பங்காளிகள் ஒன்றிணைந்து ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் நள்ளிரவு புறப்பட்டு, ஸ்ரீரங்கத்தை கோயிலுக்கு வருவார்கள்.

மாட்டு வண்டிகளில் வந்த கிராமமக்கள்..
காரணம் பட்டி வண்டியில் வைத்து சகுணம்கேட்பார்கள்.. சகுணம் என்பது வாக்கு கேட்பது ஆகும்.
வாக்கு கேட்டபிறகு மாட்டினை அலங்கரித்து பொது மக்களிடம் நிதி திரட்டி அங்கிருந்து இரவு கிளம்பி காலை ஸ்ரீரங்கம் கோவிலை வந்து அடைவார்கள். மேலும் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தோப்பில் ஓய்வு எடுத்த பிறகு , கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று மொட்டை அடித்து, அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று ரெங்கநாதரை தரிசிப்பார்கள்.
இந்தாண்டு கராணாம்பட்டி கிராமத்தை சேர்ந்த, 7 ஊரைச் சேர்ந்த கோயில் பூசாரிகள் உட்பட சுமார், 1500 பேர், 100 இரட்டை மாட்டு வண்டிகள் உட்பட, 200 வண்டிகளிலும் மொத்தமாக பத்தாயிரம் பேர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மாட்டு வண்டிகளில் வந்த கிராமமக்கள்..

மாட்டு வண்டிகளில் வந்த கிராமமக்கள்..
பின்னர் ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி சொந்த ஊருக்குச் சென்று மாட்டிற்கு அபிஷேகம் செய்து இவ்விழாவினை முடித்து வைப்பார்கள். மேலும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த பிறகு குழந்தைகள் பிறந்தாலும் மீண்டும் ஐந்து வருடம் கழித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வரும்போது தான் பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பார்கள் .

மாட்டு வண்டிகளில் வந்த கிராமமக்கள்..
போக்குவரத்தில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்ட இந்த காலத்திலும், தங்களின் பாட்டன் முப்பாட்டன்களைப்போன்றே மாட்டு வண்டிகளில் சென்றுதான் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வேண்டும் என்பதில் மாற்றம் ஏற்படுத்தாமல் இன்னமும் மாட்டுவண்டிகளில் வந்து குலதெய்வத்தை வணங்கி செல்லும் இந்த வகை பக்தர்கள் ஒரு ஆச்சர்யம்தான். இந்த பாரம்பரியம் எங்களின் ஒற்றுமையை காட்டும் விதமாக இருக்கிறது என்று தான் கூறி வருகிறார்கள்.
செய்தியாளர் -என்.மணிகண்டன்.
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.