ஹோம் /திருச்சி /

திருச்சி மலைக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்கள் எரியும் கார்த்திகை மகா தீபம்

திருச்சி மலைக்கோட்டையில் தொடர்ந்து 3 நாட்கள் எரியும் கார்த்திகை மகா தீபம்

X
திருச்சி

திருச்சி மலைக்கோட்டை

மலைக்கோட்டையில் மெகா தீபம் ஏற்றம் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் தரிசனம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் மலை உச்சியில் உள்ள கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மெகா திரியை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

செப்பு கொப்பரையில் எண்ணெய் ஊற்றும் பணி மற்றும் 300 மீட்டர் நீளம் உள்ள பருத்தி துணியாலான பிரமாண்டமான திரி தயாரிக்கும் பணிகள் முடிவடைந்தது.  தயார் செய்யப்பட்ட இந்த திரி கயிறு கட்டி மேலே தூக்கி செல்லப்பட்டு பின்பு செப்பு கொப்பரையில் வைக்கப்பட்டது. செப்பு கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவை கலந்த ஊற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடியில் நின்று கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நிறுத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்படும் தீபத்தை, கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் வைத்து சரியாக ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக தாயுமான சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து எரியும். வானிலை சீற்றங்கள் ஏற்பட்டாலும் அழியாது தொடர்ந்து எரியும். இந்த தீபத்தை மலைக்கோட்டை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும். இதேபோன்று திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் உறையூர் வெக்காளியம்மன் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Karthigai Deepam, Local News, Tamil News, Trichy