ஹோம் /திருச்சி /

திருச்சியின் பிரதான சுற்றுலா தலமான கல்லணைல இவ்ளோ விஷயம் இருக்கா? வாங்க ஒரு ட்ரிப் போலாம்..

திருச்சியின் பிரதான சுற்றுலா தலமான கல்லணைல இவ்ளோ விஷயம் இருக்கா? வாங்க ஒரு ட்ரிப் போலாம்..

திருச்சியின்

திருச்சியின் பிரதான சுற்றுலா தலமான கல்லணை

Trichy Kallanai Dam | திருச்சி கல்லணையை பொருத்தமட்டில் ஒரு வரலாற்று நினைச்சின்னமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. சிறுவர்கள் விளையாடி மகிழ ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவும், படகு சவாரியும் இங்கு உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

பல சிறப்புகளை உள்ளடக்கிய திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு அணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலைக்கோட்டை, பச்சைமலை, புளியஞ்சோலை, கல்லணை என சுற்றுலா தலங்கள் ஏராளம் உள்ளன.

இதுல நம்ம இன்னைக்கு பாக்க போறது அகண்ட காவிரி ஆற்றின் குறுக்கே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சோழப்பேரரசன் கரிகாலன் கட்டிய கல்லணை.. உலகையே வியக்க வைத்த தமிழன் கட்டிய இந்த அணையானது, தற்போதும் இயங்கி வரும் உலகின் நான்காவது பழமையான நீர் திசைதிருப்பல் அல்லது நீர் பாசன கட்டமைப்பு ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழரின் தொழில்நுட்பம், பல நூறு ஆண்டுகளை கடந்தும் இன்று வரை அதே உறுதியோடு நிற்பது வியத்தகு சாதனையாக புகழப்படுகிறது.

திருச்சியின் பிரதான சுற்றுலா தலமான கல்லணை

கல்லணையை பொருத்தமட்டில் ஒரு வரலாற்று நினைச்சின்னமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. சிறுவர்கள் விளையாடி மகிழ ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவும், படகு சவாரியும் இங்கு உள்ளது.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

இதுதான் ரூட்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் ஏறினா 15 கிமீ பயண தூரத்துல கல்லணையை அடைய முடியும்.. மாநகர பேருந்து சேவை நிறையவே இருக்கு.. தனியார் வாகனங்கள்ளயும் நேரடியா அணை பகுதிக்கே வரமுடியும்..

திருச்சியின் பிரதான சுற்றுலா தலமான கல்லணை

கல்லணைக்கு வந்து இறங்கியதுமே சுட சுட சோளக்கருது, கடலை, மீன் வாசம் நம்மள சுண்டி இழுக்கும். கொஞ்ச தூரம் அப்படியே நடந்து போனோம்னா சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏராளமான பொழுதுபோக்கு, சாதனங்களுடன் கூடிய பூங்கா இருக்கு.. இங்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், வயதான பெரியவங்க, குழந்தைகளோட குடும்ப சகிதமாகவும் பலரும் வந்துட்டு இருக்காங்க.

மேலும் படிக்க:  திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

இந்த பூங்காவை விட்டு அப்படியே வெளியே போனோம்னா கல்லணையில் இருந்து வர தண்ணீர், நம்ம மேல மலை சாரல் போல் வீசும் அது நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும்..

திருச்சியின் பிரதான சுற்றுலா தலமான கல்லணை

மெல்ல அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போனோம்னா ரொம்ப கூட்டமா இருந்துச்சு என்னன்னு போய் பார்த்தா பஜ்ஜி கடை.. எப்படி இருக்குன்னு வாங்கி டெஸ்ட் பண்ணி பார்த்தா, நம்ம கல்லணை தண்ணீருக்கு இதமா சுட சுட பஜ்ஜி டேஸ்ட் வேற லெவல்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்படி ஏகப்பட்ட விஷயம் இருக்கு கல்லணைல குடும்பத்தோடு வந்து பார்ப்பதற்கு இது ஒரு நல்ல சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy