ஹோம் /திருச்சி /

பஸ் எப்ப சார் வரும்?.. பேருந்து வசதி கோரும் திருச்சி காஜாமலை பெரியார் கல்லூரி மாணவர்கள்..

பஸ் எப்ப சார் வரும்?.. பேருந்து வசதி கோரும் திருச்சி காஜாமலை பெரியார் கல்லூரி மாணவர்கள்..

திருச்சி

திருச்சி காஜாமலை பெரியார் கல்லூரி

Trichy Kajamalai Periyar College | திருச்சி காஜாமலை பகுதியில் ஏராளமான கல்லூரிகள் அமைந்துள்ளது அங்கு போதுமான அரசு பேருந்து சேவை இல்லை என பெரியார் கல்லூரி மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

பேருந்து வசதி கோரும் திருச்சி காஜாமலை பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள்..

திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் அமைந்துள்ளது தந்தை பெரியார் கலைக் கல்லூரி. இக்கல்லூரியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அருகாமை மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். தினந்தோறும் கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் இலவச பஸ் பாஸை பெரிதும் நம்பி உள்ளனர்.

மாணவர்கள் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் கடந்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் தங்கள் கல்லூரி பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

மேலும் படிக்க:  திருச்சியின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட், சிறந்த பொழுதுபோக்கு இடம் இப்ராஹிம் பூங்கா - அழகும் சிறப்பும்!

உடனடியாக கல்லூரி பகுதிக்கு அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகள் பேருந்துகள் குறித்த நேரத்தில் இல்லாததால் நெடுந்தூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி காஜாமலை பெரியார் கல்லூரி

குறிப்பாக பெண்கள் அதிக அளவில் நடந்து சென்றும் கல்லூரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் திருச்சி மண்டல போக்குவரத்து துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்லூரிக்கு போதுமான அளவிற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Trichy