ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - காளைகளை துன்புறுத்தக்கூடாது என கலெக்டர் அறிவுரை

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - காளைகளை துன்புறுத்தக்கூடாது என கலெக்டர் அறிவுரை

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Trichy District | திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில்,  ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தக்கூடாது என கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தக் கூடாது என கலெக்டர்  பிரதீப்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் திருவிழாவையொட்டி மாட்டுப்பொங்கல் அன்று (வருகின்ற 16ஆம்) தேதி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் இந்த சூரியூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, வாடிவாசல், ஜல்லிக்கட்டு திடல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தேபோல, பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார். இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள், மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஜல்லிக்ட்டில் வெற்றி பெறும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் சார்பில் பைக், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், டி.வி., பிரிஜ் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

Must Read : அழகே உருவான அரியமான் கடற்கரை... விடுமுறையைக் கழிக்க செம ஸ்பாட்..

இந்நிலையில், இந்த ஆய்வுக்கு வந்த கலெக்டர் பிரதிப்குமார விழா கமிட்டியினர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பாக கலந்தாலோசித்தார். ஜல்லிக்கட்டில் காளைகளை துன்புறுத்தக்கூடாது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

First published:

Tags: Jallikattu, Local News, Trichy