Home /trichy /

வளரும் நெற்குதிர்கள்?... திருச்சியில் ஓர் அதிசயம்!

வளரும் நெற்குதிர்கள்?... திருச்சியில் ஓர் அதிசயம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ள, நெல்லை சேமித்து வைக்கும் நெற்குதிர்கள் எவ்வளவு நெல்லை கொட்டினாலும்  விரிவடைந்து ஏற்கும் தன்மை கெண்டது என்று சொல்லப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம் என்று போற்றப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். திவ்ய தேசங்கள் (Divya Desam) என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

திவ்ய தேசங்களில் முதன்மையானதாக உள்ள இந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது. ராமபிரான் அளித்த ஸ்ரீரங்கநாதரை விபீஷணன் இங்கே வைத்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர், தர்மசோழனும் கிள்ளி வளவனும் பல்வேறு திருப்பணிகள் செய்து இந்த ஆலயத்தை விரிவாக்கினார்கள்.

பிரம்மாண்ட நெற்கலன்கள்


இந்த கோவிலில் ரங்கநாதர் 21 அடி நீளத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளி அருள்புரிகிறார். 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம் என்ற பெருமையைக் கொண்டது தலம் இது. 156 ஏக்கர் பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய ஆலயமும் இதுவே. இவ்வாறு இந்த தலத்திற்கு ஏராளமான பெருமைகள் இருக்கின்றன. அதில் ஒன்று இந்த கோவிலில் இருக்கும் வளரும் நெற்குதிர்கள் என்று சொல்லப்படுகிறது.

வளரும் நெற்குதிர்கள் -

30 அடி உயரமும் 20 அடி விட்டமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நெல் சேமிப்பு கிடங்குகள் வட்டவடிவமாக அமைந்துள்ளன. 1,500 டன் அளவுக்கு இந்த கிடங்கில் தானியத்தை சேமிக்க முடியும் என்கிறனர்.

பிரம்மாண்ட நெற்கலன்கள்


இந்த குதிர்களில் எந்தக் காலத்திலும் நெல் இல்லாமல் போனதே இல்லை என்ற பெருமையைக் கொண்டது என்று போற்றப்படுகிறது. அதேபோல எவ்வளவு நெல்லை கொட்டினாலும் அதிசய குதிர்கள் விரிவடைந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும் சொல்கிறார்கள்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி