முகப்பு /திருச்சி /

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் திறப்பு!

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் திறப்பு!

X
திருச்சி

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் திறப்பு

Trichy News | திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் திறப்பு.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் திறக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் திறப்பு

இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் குத்துவிளக்கேற்றி அலுவலக கட்டிடத்தினை பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் கங்காதாரணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Trichy