ஹோம் /திருச்சி /

திருச்சியில் வாகன ஓட்டிகளை திரும்பி பார்க்க வைக்கும் மேலப்புதூர் பாலம்..

திருச்சியில் வாகன ஓட்டிகளை திரும்பி பார்க்க வைக்கும் மேலப்புதூர் பாலம்..

X
மேலப்புதூர்

மேலப்புதூர் பாலம்

Trichy District News : திருச்சியில் இரவில் ஒளிரும் மேலப்புதூர் பாலம். கடந்து செல்வோரை திரும்பி பார்க்க வைக்கிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாநகரை மேம்படுத்தும் வகையிலும், அழகுபடுத்தும் வகையிலும் பல திட்டங்களை மாநகராட்சி முன்னெடுத்து சில திட்டங்களை செய்து முடித்தும் உள்ளது. அதன் ஒரு பகுதியாக மேலப்புதூர் பாலத்தில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் உள்ள பாலங்களில் மேம்பாலமாகவும், சுரங்கப்பாலமாகம் உள்ளது தான் இந்த மேலப்புதூர் பாலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் மாநகரின் முக்கிய பாலமாக இது இருக்கிறது.

1978ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. இதை கட்டி 46 ஆண்டுகள் ஆனாலும், இதுவரை பாலத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இந்த பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

இதையும் படிங்க : திருச்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்..

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பாலம் முழுவதும் தேசிய கொடியின் மூன்று வண்ணத்தில் ஓவியங்கள் வரையப்பட்டன. மேலும் தற்போது பாலத்தின் சுவர்களில் இரவில் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இரவில் இந்த பாலத்தை பயன்படுத்துவோரை நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் ஜொலிக்கிறது இந்த மேலப்புதூர் மேம்பாலம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Trichy