Home /trichy /

அடடே! திருச்சி மலைக்கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுவாரஸ்ய தகவல்கள்

அடடே! திருச்சி மலைக்கோட்டைக்கு இத்தனை சிறப்புகளா - சுவாரஸ்ய தகவல்கள்

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி மலைக்கோட்டை

Trichy Rockfort : திருச்சியின் அடையாளமாகத் திகழும் மலைக்கோட்டைக்கு உள்ள சிறப்புகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்களைக் காணலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சி. இதன் முக்கிய அடையாளமாக திகழ்கிறது மலைக்கோட்டை. அதனால்தான் ‘திருச்சி மலைகோட்டடா’ என்று திரைப்பட பாடல்வரி அதனை எடுத்துக்காட்டுகிறது. இந்த திருச்சி மலைக்கோட்டை கோவில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்திலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்திலும் இருக்கிறது.

    மலைக்கோட்டை

    தொன்மை வாய்ந்த மலைப்பாறை மீது கட்டப்பட்ட இந்த கோட்டை, கோயில்கள் ஆகியவற்றை கொண்டதாக மலைக்கோட்டை திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது.

    திருச்சி மலைக்கோட்டை


    பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரத்தில் இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3,400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    திருச்சி மலைக்கோட்டை


    மலையின் உயரம் நில மட்டத்திலிருந்து உச்சிப் பிள்ளையார் சிகரம் வரை 273 அடி. 178 படிகள் ஏறி முடித்தால் ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை அடைய முடியும். அடிவாரத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலை அடைய 417 படிகள் ஏற வேண்டும்.

    ஆட்சிகள் மாறின கோட்டை ஒன்றுதான்

    காஞ்சிபுரத்தை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர்கள் இங்கே குடைவரை கோவிலை எழுப்பினர். பின்னர், இந்தப் பகுதியைப் பாண்டியர்களிடம் இழந்தனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் இப்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருச்சி மலைக்கோட்டை


    சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின் விஜயநகரப் பேரரசின் கீழ் இது வந்தது. இந்த திருச்சி மலைக்கோட்டை விஜயநகரப் பேரரசால் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    விஜயநகரப் பேரரசுக்கு பின்னர், மதுரை நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் திருச்சி செழித்திருந்தது. அத்துடன் திருச்சி மாநகர் இன்றைய நிலைக்கு வளர்ந்ததற்கான அடிப்படைகளும் அப்போதுதான் உருவானதாக சொல்லப்படுகிறது. நாயக்க மன்னர்களே மலைக்கோட்டைக் கோயில் குளத்தையும், முக்கியமான சுவர்களையும் கட்டினர். அதன், பின்னர் திருச்சியை அவர்களின் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

    திருச்சி மலைக்கோட்டை கோவில்


    கோட்டையின் ஆரம்பகால பயன்பாடு போர் மற்றும் படையெடுப்பைச் சுற்றியே இருந்தது. ஆனால் சமீப காலங்களில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இந்த கோட்டை நன்கு பராமரிக்கப்படுகிறது. இது ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மலைக்கோட்டையின் சிறப்பு

    மலைக்கோட்டையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. மலைக்கு கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், இடையே தாயுமானவர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. அத்துடன், பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் உள்ளன. அத்துடன் இங்கு இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் ஆகியவை நன்கு பார்க்கலாம்.

    இந்த மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் காளை அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும். இந்த வியூவ்களை பார்க்க தவறாதீர்கள். மேலும், உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும் விநாயகரின் தும்பிக்கை போன்று தோற்றமளிக்கும் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி