முகப்பு /திருச்சி /

சோற்று கற்றாழையில் அல்வா இப்படி செஞ்சா டேஸ்ட்டா இருக்கும்..! திருச்சி வியாபாரி சொன்ன சீக்ரெட் இன்க்ரீடியன்ட்..!

சோற்று கற்றாழையில் அல்வா இப்படி செஞ்சா டேஸ்ட்டா இருக்கும்..! திருச்சி வியாபாரி சொன்ன சீக்ரெட் இன்க்ரீடியன்ட்..!

X
சோற்று

சோற்று கற்றாழை அல்வா

Herbal Soup Shop At Trichy | திருச்சியில் காஜா மலை ரவுண்டானாக்கு அருகில் சோற்று கற்றாழையில் செய்யப்படும் கற்றாழை அல்வா மற்றும் 21 மூலிகையில் செய்யப்படும் மூலிகை சூப் போன்றவை விற்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி காஜா மலை ரவுண்டானாவுக்கு அருகில் விஜயலட்சுமி அக்கா சூப் கடை உள்ளது. இந்த கடையில் சோற்றுக் கற்றாழையில் செய்யப்படும் கற்றாழை அல்வா மற்றும் 21 மூலிகையில் செய்யப்படும் மூலிகை சூப் போன்றவை விற்கப்படுகிறது. மேலும் சிறு தானியங்களில் செய்யப்படும் உணவு வகைகள் இங்கு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சிறுதானிய வகைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி வியாபார நோக்கமின்றி 5 ஆண்டுகளாக இக்கடையை இவர்கள் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விஜயலட்சுமியின் மகன் பிரசன்னா கூறுகையில், “கற்றாழை அல்வா மற்றும் சோற்றுக் கற்றாழை மோர், சோற்றுக் கற்றாழை, நாட்டுச் சர்க்கரை, நெய், பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து தயாரிக்கப்படுகிறது. 40 ரூபாயில் தொடங்கி 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தினமும் சோற்றுக் கற்றாழை மோர் குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்பட்டு அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை.

சோற்று கற்றாழையில் அல்வா

இதையும் படிங்க : சுற்றுலா பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆழ்கடல் அழகை ரசிக்க புதுவையில் தயாராகும் 'செமி சப்மெரின்' படகு!

மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. தினமும் குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுவதாகவும் கூறினார். நெல்லிக்காய் ஜூஸ் :நெல்லிக்காய், கறிவேப்பிலை, பச்சை மஞ்சள், உப்பு, இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதுநோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

சிறு தானிய பாயாச வகை :திணை, வரகு, குதிரை வாலி, சாமை போன்ற சிறு தானியங்களில் செய்யப்படும் பாயாச வகைகள் 20ரூபாய் க்கு வாரத்தின் எல்லா நாட்களும் கிடைக்கின்றன” என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், “இங்கு விற்கப்படும் மூலிகை சூப் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உழுந்தங்கஞ்சி மற்ற இடங்களைப் போல் அல்லாமல் தனிச்சுவையடன் இருக்கிறது. நன்மை தரும் சிறுதானிய பயிர்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் அவற்றை வாங்க நாங்கள் ஆர்வம் காட்டுகிறோம்,” என்றனர்.

    First published:

    Tags: Food, Local News, Trichy