”உணவே மருந்து” என்பதற்கு ஏற்ப உணவின் மூலம் ஆரோக்கியத்தை மீட்கும் ஒரு முயற்சியாக கடந்த 10 வருடங்களாக திருச்சியில் ஒரு மூலிகை ஜூஸ் கடை நடத்தி வருகிறார் முரளி .
ராஜா பார்க் பகுதியில் அமைந்துள்ள முரளி பழச்சாறு கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகிறார்கள். காலை 5 மணி முதல் 9 மணி வரை பல வகையான பிரெஷ் ஜூஸ் மற்றும் சூப் ஆகியவற்றை நடை பயிற்சிக்கு வருபவர்களுக்கு குறைந்த விலை தருகிறார்.
காலை வேளையில் வாக்கிங் செல்வர்கள் அந்த கடைக்கு செல்லாமல் போக மாட்டார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையில் அருகம்புல் ஜூஸ், ஆவாரம் பூ, கேரட் ஜூஸ், அனைத்து வகையான பழச்சாறுகள் கிடைக்கும்.
இன்றைய தலைமுறைக்கு பழங்கால உணவுகளை மீட்டு மீண்டும் அவர்களின் உணவு பழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எடுத்துக்காட்டும் விதமாக இதுபோன்ற இயற்கை உணவகங்கள் மற்றும் மூலிகை சூப் கடைகள் பல தலைதூக்கி வருகிறது. அதற்கு மக்கள் அளிக்கும் ஆதரவும் அதிகரித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Soup, Trichy