முகப்பு /திருச்சி /

ஓயாமல் எரிந்து கொண்டிருக்கும் திருச்சி ஓயாமரி இடுகாடு.. அருகிலேயே அரிச்சந்திரன், காலபைரவர், சனீஸ்வரருக்கு தனியாக கோவில்கள்..

ஓயாமல் எரிந்து கொண்டிருக்கும் திருச்சி ஓயாமரி இடுகாடு.. அருகிலேயே அரிச்சந்திரன், காலபைரவர், சனீஸ்வரருக்கு தனியாக கோவில்கள்..

X
திருச்சி

திருச்சி அரிச்சந்திர மகாராஜா கோவில்

Trichy Harichandran Temple | திருச்சியில் ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்றுள்ளது. இந்த இடுகாட்டுக்கு அருகில் அரிச்சந்திரருக்கு தனியாக கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் காலபைரவர் மற்றும் சனீஸ்வரருக்கு தனியாக கோவில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சி காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் அரிச்சந்திர மகாராஜாவுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலின் பின்புறத்தில் காலபைரவர் மற்றும் சனீஸ்வரருக்கு தனியாக கோவில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு தினமும் 4 கால பூஜைகளும், 2 முறை அபிஷேகமும் நடைபெறுகிறது. சுடுகாடு பகுதியில் இந்த கோவில் உள்ளதால் முதலில் பக்தர்கள் வர தயங்கினார்கள். பெண்கள் சுடுகாட்டிற்கு போகக்கூடாது என்பதை ஒரு ஐதீகமாக கருதினர்.

ஆனால் தற்போது இங்குள்ள காலபைரவர் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். தேய்பிறையில் வரும் அஷ்டமியில் காலபைரவருக்கு நடைபெறும் பல்வேறு வகையான அபிஷேகத்தை பார்த்து விட்டு, எள் விளக்கு, எலுமிச்சை பழம் விளக்கு, தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள், விரைவில் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும் படிக்க:  யுனெஸ்கோ விருது.. பெரிய கோபுரம்.. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

இதனால் ஓயாமரியில் உள்ள அரிசந்திரர், காலபைரவர், சனிபகவான் கோவிலில் கடந்த சில வருடமாகவே அதிக அளவில் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இந்த காலபைரவர் அரிச்சந்திரன் மகாராஜாவுக்கு கோவில் அமைக்கப்பட்டது காசிக்கு பிறகு திருச்சியில் மட்டும்தான்.

திருச்சி ஓயாமரியில் உள்ள அரிசந்திரர் கோவில்

இந்த ஓயாமரி சுடுகாட்டில் இதுவரை ஆயிரக்கணக்கான பினங்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு தலைமுறையாக இந்த சுடுகாட்டில் தான் பணிபுரிந்து வருவதாகவும் அங்கு பணியில் இருப்பவர் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு பிணங்களாவது கண்டிப்பாக எரிக்கப்படும், ஆண்டுக்கணக்கில் தினசரி அளவில் பிணங்கள் எரிக்கப்படுவது இந்த சுடுகாட்டில் மட்டும் தான் .

top videos

    ஆகையால் ஓய்வில்லாமல் எரிந்து கொண்டிருப்பதால் இதற்கு ஓயாமரி இடுகாடு என்று பெயர் வந்தது.

    First published:

    Tags: Local News, Trichy