ஹோம் /திருச்சி /

திருச்சியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்..

திருச்சியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்..

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

Trichy District News : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் காந்தி சிலைக்கு மனு அளிக்கும் நூதன போராட்டம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டமைப்பு சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வருவாய்த்துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையினை பார்வையற்ற இசை கலைஞர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையும் படிங்க : வாடகை வீட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில்... திருச்சியில் புரோக்கர் கைது..

பின்னர் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையிடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Trichy