ஹோம் /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - நாளை நடக்கிறது

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் - நாளை நடக்கிறது

திருச்சி

திருச்சி

Grievance Meeting of Farmers Tomorrow in Trichy | திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செப்டம்பர் 30) நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளைத் தொரிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டமாக நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்தும், மனுக்களாக வழங்கியும் வருகின்றனர்.

அதன்படி, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க : பெண்களே உஷார்..! உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உண்ணி காய்ச்சல் பரவுது - திருச்சி டீன் எச்சரிக்கை

இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடன் உதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, திருச்சி மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து அதனை தீர்த்து கொள்ளுங்கள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy