முகப்பு /திருச்சி /

ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும்..! மீன் வளர்ப்பில் அசத்தும் திருச்சி பொறியியல் பட்டதாரி..! 

ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும்..! மீன் வளர்ப்பில் அசத்தும் திருச்சி பொறியியல் பட்டதாரி..! 

X
மாதிரி

மாதிரி படம்

Fish Farming | திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே ஆலத்துடையான்பட்டி என்னும் கிராமத்தில் பொறியியல் பட்டதாரி எட்வின் மீன் வளர்ப்பு செய்து வருகிறார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே ஆலத்துடையான்பட்டி என்னும் கிராமத்தில் பொறியியல் பட்டதாரி எட்வின் மீன் வளர்ப்பு செய்து வருகிறார். கொரோனா நேரத்தில் விவசாயத்தில் வருமானம் இல்லாததால், மீன் வளர்ப்பு செய்ய தொடங்கியதாகவும் இதில் நல்ல இலாபம் பெறுவதாவும் கூறினார்.

குளம் அமைக்கத் தகுதியான இடம்நீரைத்தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். களிமண், வண்டல்மண், மணல் ஆகியன கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும்.

மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதியாக அவர்களின் நிலம் இருப்பதால், அவற்றை பயன்படுத்தி மீன் வளர்ப்பு செய்து வருகிறார்.

மீன் வளர்ப்பில் அசத்தும் திருச்சி பொறியியல் பட்டதாரி

ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ.30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. ரூ.2 லட்சம் வரை லாபம் பெற முடிகிறது என்றும், விவசாயம் செய்து நெல் விளைப்பதைக் காட்டிலும், மீன் வளர்ப்பில் அதிக இலாபம் பெறலாம் என்கிறார்.

கூட்டு மீன் வளர்ப்பு முறையில் இந்தியப் பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிரிகால் ஆகியவை ஒருங்கிணைத்து வளர்த்து வருகிறார். மீன்களுக்கு அம்மை நோய் ஏற்படும். அவற்றை கட்டுப்பாடுத்த இயற்கை முறையை பயன்படுத்துவதாக கூறினார். மக்கள் நேரடியாகவே மீன் பண்ணையில் இருந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ மீன் 200 ரூபாயில் இருந்து விற்கப்படுகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Trichy