முகப்பு /திருச்சி /

சென்னையில் அகவிலைப்படி கேட்டு தொடர் போராட்டம்.. திருச்சியில் அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு..

சென்னையில் அகவிலைப்படி கேட்டு தொடர் போராட்டம்.. திருச்சியில் அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு..

X
திருச்சியில்

திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டம்

Government Transport Corporation All Pensioners Federation Notice | அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு அகவிலைப்படி உயர்வு மீட்பு குழு ஆலோசனை கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நவம்பர் 2015ம் ஆண்டு முதல் நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வினை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.

ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும். அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 2003ம் ஆண்டுக்கு பிறகு போக்குவரத்து கழகத்தில் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மாநிலத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் பணியில் உள்ள ஊழியர்களை இணைத்து தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவை பெற்று முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் மார்ச் மாதம் 3வது வாரத்தில் நிறுத்தப்பட்ட 88 மாத அகவிலைப்படி உயர்வினை வழங்கும் வரை காலவரையின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தசரத ராமன், ராஜேந்திரன், சுப்பிரமணியன் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

First published:

Tags: Local News, Trichy