முகப்பு /திருச்சி /

அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல.. பெருமையின் அடையாளம் என்பதை  நிரூபித்துள்ளது திருச்சி அரசு பள்ளி.. 

அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல.. பெருமையின் அடையாளம் என்பதை  நிரூபித்துள்ளது திருச்சி அரசு பள்ளி.. 

X
திருச்சி

திருச்சி

Trichy District News : திருச்சியில் இயங்கி வரும் புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வசதிகளை பெற்றுள்ளது. இந்த பள்ளி குறித்த ஒரு செய்தித்தொகுப்பு.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் திருச்சி மாவட்டத்தில், புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, லால்குடி ஒன்றியத்தில் எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மணிகண்டம் ஒன்றியத்தில் கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சிறப்பாக அமையப்பெற்றுள்ளன. ஏ.சி.வகுப்பறைகள், ஸ்மாட் கிளாஸ்ரூம்கள், விளையாட்டு மைதானம், என தனியார் பள்ளிகளை காட்டிலும் அதிக வசதிகள் இந்த பள்ளியில் இடம்பெற்றுள்ளன.

இங்கு பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று கொள்ள ஏதுவாக ப்ரொஜெக்டர் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாணவருக்கும் மடிக்கணினி, பாடங்கள் குறித்து செய்முறை விளக்கம் போன்றவை மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில முடியும். அதேபோல் இங்கு பயிலும் மாணவர்களின் சீருடைகள் கூட தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ளது.

இதையும் படிங்க : திருச்சியில் வெங்காய மூட்டைகளுக்கு இடையில் கடத்திய ரூ.55 லட்சம் மதிப்புடைய குட்கா பறிமுதல்

கல்வி மட்டுமல்ல மேடை பேச்சுகளில் மாணவர்கள் தங்கள் தனி திறமை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக வகுப்பறையில் மைக் மூலம் அவர்கள் பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கு அனைத்து விளையாட்டு உபகரணங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வி, விளையாட்டு, கலைத்திறன் என மாணவர்கள் அனைத்துதிறன்களையும் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டு சிறந்த குடிமக்களாக வர உதவுகின்றன.

மற்ற அரசு பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக விளக்கும் அரசு பள்ளி இதை சாதித்தது எப்படி என தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, “நான் கடந்த 2020ம் ஆண்டு, இந்த பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றபோது இங்கு 20 மாணவ, மாணவிகள் மட்டும் படித்தனர்.

மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, ஸ்மார்ட் வகுப்பு, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ் வகுப்புகள், க்யூ புக் வகுப்புகள் என பலவற்றை தொடங்கினேன்.

அதன் மூலம் மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது. இன்று எங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் போட்டி போடும் அளவுக்கு எங்களை வளர்த்துக் கொண்டோம்.

அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை எங்கள் பள்ளி நிரூபித்துள்ளது. இந்த பள்ளியின் முன்னேற்றத்தை பார்த்த தனியார் பள்ளி மாணவர்கள் பலர், இங்கு சேர்க்கை பெற ஆர்வமாக உள்ளனர். இட பற்றாக்குறையை காரணம்காட்டி மாணவர்களை சேர்க்க மறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மாணவர் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்த அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். பள்ளிக்கல்வித்துறை அதை விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வரும் கல்வி ஆண்டில் கூடுதல் வகுப்பறை கட்டி தருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது அப்படி தரும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று நம்பிக்கை ததும்ப பேசினார்.

First published:

Tags: Local News, Trichy