Home /trichy /

சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..

திருச்சி

திருச்சி - நடிகர் சிவாஜி சிலை

Trichy Sivaji Statue | திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜி சிலையின் மேல் உள்ள துணி முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் சிலை சுற்றியுள்ள குப்பை மற்றும் செடி கொடிகளை அகற்றி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
திருச்சி மாநகர் பகுதியில் பாலக்கரை அருகே பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜி வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
1928ஆம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.முதலில் அவர் திருச்சியில் உள்ள நாடகக்குழுவில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைத்துறையிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி காலமானார்.

இவரது மறைவுக்குப் பின்னர் 2011 ஆம் ஆண்டு திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் சிவாஜிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டது. பொது இடங்களில் சிலைகள் வைக்ககூடாது என நீதிமன்றம் உத்தரவைதொடர்ந்து சிவாஜி சிலை திறக்க முடியவில்லை.

இதையும் படிங்க:  திருச்சியில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா - முழு விவரம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நியூஸ் 18 இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் இது குறித்து அமைச்சர் கே என் நேருவிடம் கேட்டபோது சிவாஜி சிலை தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பின் விரைவில் சிவாஜி சிலையை திறக்கப்படும் என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் சிவாஜி சிலையின் மேல் உள்ள துணி முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் சிலை சுற்றியுள்ள குப்பை மற்றும் செடி கொடிகளை அகற்றி வருகின்றனர்.
மாநகராட்சி சிவாஜி சிலையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சிவாஜி ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி