Home /trichy /

திருச்சியில் மகாத்மா காந்தி திறந்து வைத்த மார்க்கெட்.. இதன் வரலாறு தெரியுமா?

திருச்சியில் மகாத்மா காந்தி திறந்து வைத்த மார்க்கெட்.. இதன் வரலாறு தெரியுமா?

திருச்சி

திருச்சி காந்தி மார்க்கெட்

Trichy Gandhi Market | மகாத்மா காந்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி காந்தி மார்க்கெட் பற்றி அறிந்து கொள்வோம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli
எப்போதும் கூட்ட நெரிசல், ஒருபக்கம் உழைப்பாளிகளுடைய வியர்வை வாசனை என திருச்சி காந்தி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். 

காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டு 1934-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதே ஆண்டு காந்தியடிகள் திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். இப்போது அவரின் பெயரிலேயே உள்ளது.

காந்தியின் மரணத்துக்குப் பிறகு மார்கெட்டின் நுழைவாயிலில் அவரது நினைவாக அமைக்கப்பட்ட காந்தி சிலையை, 1953 அக்டோபர் 30 அன்று அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி திறந்துவைத்தார்.

இதையும் படிங்க:  தீராத கடன் தொல்லையா... நிம்மதி இல்லையா? - திருச்சியில் உள்ள ஸ்ரீ காட்டழகிய சிங்கரை வணங்குங்கள்!

6.25 ஏக்கர் நிலப்பரப்பளவு கொண்ட இந்த மார்கெட்டில், தற்போது 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை, தரைகடை, வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். பழ மண்டி, வெங்காயம் மண்டி, வாழை மண்டி, உருளை மண்டி , மீன் மார்க்கெட் என பல்வேறு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் சில்லறை வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டில் நம்பியே தங்களது வாழ்வாதாரம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். திருச்சி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுவட்டாரம் உள்ள மாவட்டங்களிலிருந்து மக்கள் காந்தி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் வருகை புரிவார்கள்.
Published by:Arun
First published:

Tags: Local News, Trichy

அடுத்த செய்தி