Home /trichy /

திருச்சி கால்நடைப் பல்கலைக்கழகத்தில் நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி

திருச்சி கால்நடைப் பல்கலைக்கழகத்தில் நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சி பல்கலைக்கழகத்தில் இன்று நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    திருச்சி கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மையத்தில், நாட்டுக் கோழி வளர்க்க இலவசப் பயிற்சி இன்று அளிக்கப்படவுள்ளது. உனடியாக பயிற்சி பெற விரும்புவோர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

    திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணைச் சாலையில் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. தரமான நாட்டுக் கோழி இனங்களைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளா்ப்பு, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குஞ்சுகளைக் கூண்டில் வளா்த்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை பொரித்தல் குறித்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்துக் கற்று தரப்படுகின்றது.

    இதற்கான பயிற்சி முகாம் இன்று இலவசமாக நடக்கிறது. விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சிச் மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    மேலும், இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி பயிற்சியில் சேரலாம் என பேராசிரியரும், மையத் தலைவருமான வே.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Trichy

    அடுத்த செய்தி