ஹோம் /திருச்சி /

உலக வெறிநோய் தினம்; திருச்சியில் விலங்குகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

உலக வெறிநோய் தினம்; திருச்சியில் விலங்குகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருச்சியில் விலங்குகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் முழுதுவம் நாளை இலவசமாக வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வெறிநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கால்நடை மருத்துவமனைகளில் நாளை ( 28 ம் தேதி ) இலவசமாக விலங்குகளுக்கு வெறி நோய் கடி மருந்துகளை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறிநாய் கடித்து விட்டால், கடிபட்ட நாளிலிருந்து 0, 3, 7, 14, 28ம் நாட்களில் தவறாமல் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம்.

நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தின் மீது குழாய் தண்ணீரில் அல்லது தண்ணீரை புண்மேல் ஊற்றி வழிந்தோடும் படி செய்து கழுவ வேண்டும். கார்பாலிக் அமிலம் கலந்த சோப்பு போட்டு கழுவினால் வைரஸ் கிருமி அழியும்.

டிஞ்சர் அயோடின் பஞ்சில் நனைத்து, காயத்தில் வைக்க வேண்டும். மேற்கூறியபடி செய்வதன் மூலம் காயத்தில் வைரஸ் கிருமியின் எண்ணிக்கையை குறைத்து, நோய் உண்டாகும் காலத்தை நீட்டித்து, அதற்குள் தடுப்பூசி போட்டு நோய் வராமல் தடுத்துவிடலாம்.

உடன் மருத்துவரை அணுகி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவ நிலையங்களில் நாளை 28-ந் தேதி அன்று நடைபெறும் இலவச தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு கால்நடைகளை வெறிநோயிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதை பயன்படுத்தி பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Trichy