ஹோம் /திருச்சி /

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் களைகட்டும் சிறுதானிய உணவுத் திருவிழா

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் களைகட்டும் சிறுதானிய உணவுத் திருவிழா

X
திருச்சி

திருச்சி

Food Festival : திருச்சி மாவட்டத்தில் சிறுதானிய உணவு திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து சிறுதானிய உணவுத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுதானிய வகைகள் மற்றும் அவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை பார்வையிட்டார். இந்நிகழ்வினை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு ஒருங்கிணைத்தார்.

சிறுதானிய விற்பனை அங்காடிகள் சார்பில் சிறுதானிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிறுதானிய வகைகளை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர். கம்பு, சோளம், திணை, வரகு, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு கூழ், பாயாசம், கட்லெட், ஐஸ்கிரீம், சூப் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை கல்லூரி மாணவர்கள் தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதில் திருச்சி மாவட்டம், பிள்ளார் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சிறுதானிய உணவுப் பொருட்களை தயாரித்து காட்சிப்படுத்தியதுடன், தன் பள்ளி மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த மூலிகைகளையும் அதன் பயன்களையும் வகைப்படுத்தி காட்சிப்படுத்தியிருந்தார்.

First published:

Tags: Local News, Trichy