ஹோம் /திருச்சி /

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு - திருச்சியில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு - திருச்சியில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு

காவிரியில் வெள்ளப்பெருக்கு

Trichy Latest news : திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் அணைகள் மீண்டும் நிரம்பியுள்ளன. இதனால், உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

  இந்த நீர்வரத்தால், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வந்த உபரிநீர் முழுவதும் தற்போது காவிரியில் திறந்து விடப்படுகிறது.

  இதனால், காவிரியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, காவிரி கரை ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில், நேற்று இரவு 7 மணி நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 1.37 லட்சம் கன அடி தண்ணீர் வருவதால், இந்தநீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது.

  அதன்படி, கொள்ளிடம் ஆற்றில் 95 ஆயிரம் கன அடியும், காவிரியில் 42 ஆயிரம் கன அடியும் வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு பின்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, முக்கொம்புவில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றப்பட்டதையும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  மேலும், 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கக்குடாது என்று எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், கரையோரப்பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Cauvery River, Flood warning, Local News, Trichy