முகப்பு /திருச்சி /

புளியஞ்சோலையில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

புளியஞ்சோலையில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

புளியஞ்சோலை

புளியஞ்சோலை

Puliyanjolai Flood | புளியஞ்சோலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த கன மழையின் காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கிருந்து கொல்லிமலை அடிவாரம் சுற்றுலாத்தலமானபுளியஞ்சோலைக்குவெள்ள நீர் வரத்து அதிகரித்தது .

இதனால்புளியஞ்சோலையில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கிருந்து வழிந்தோடும் நீரானது, ஜம்பேறி, ஆலத்துடையான்பட்டி ஏரி,  எரகுடிஅய்யாறு, ரெட்டியார்பட்டிஏரி, வீரமச்சன்பட்டிஏரி, காவேரிப்பட்டி, திண்ணக் கோணம், திருத்தலையூர், வாத்தலை ஆகிய ஏரிகள் வழியாக வழிந்து சென்று முக்கொம்பு அடையும்.

கோடைக்காலத்திலும் திடீரென பெய்த கன மழையின் காரணமாக பல கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீர்நிலைகள் உயர்ந்து வருகிறது. இதனால் பிரியாணி அரிசிக்கு பெயர் பெற்ற வைரிசெட்டிப்பாளையம், பி மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Tourist spots, Trichy