திருச்சியை ஆட்சி செய்த போது ஆங்கிலேயர்கள் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க விஷயங்களை விட்டு சென்றுள்ளனர். அதில் முக்கியமானது இந்த பூங்கா .
திருச்சி மாவட்டத்தை அப்போது ஆட்சி செய்த சிப்லி மாவட்ட ஆட்சியரால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது தான் இந்த பூங்கா.
திருச்சி மாநகரில் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட முதல் பூங்கா என்ற சிறப்பையும் இந்த பூங்கா பெற்றுள்ளது. தொடக்க காலத்தில் மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக பயன்படுத்தி வந்தனர்..
பின்பு காலப்போக்கில் பூங்காவை மேம்படுத்துவதற்காக உயரமாக வளரக் கூடிய மரங்களை கொண்டு வந்து இந்த பூங்காவில் வளர்த்தனர். இதனால் அந்த பூங்கா முழுவதும் இயற்கை சூழலை தன்வசம் கொண்டது. மிக உயரமான மரங்கள் மற்றும் இயற்கை சூழலை காண்பதற்காகவே மக்கள் அதிக அளவில் தங்கள் குடும்பத்துடன் பூங்காவை பயன்படுத்த தொடங்கினார்கள்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு இவற்றுக்கெல்லாம் முதன்மையாகவும் சிறப்பாகவும் இருந்ததுதான் இந்த பூங்கா !
இதன் பெயரை சொன்னாலே தெரியாத மக்கள் யாரும் இல்லை. ஆனால் காலப்போக்கில் இந்த பூங்கா அழிவுற்று மக்கள் நடமாட்டம் இல்லாத அளவிற்கு மாறியுள்ளது என்றனர். தொடக்க காலத்தில் மிக உயரமான மரங்களை பார்ப்பதற்காகவும், இயற்கை சூழலில் மக்கள் தங்களுடைய குழந்தைகளுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது உடலில் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியும் தரக் கூடிய அளவிற்கு இந்த பூங்கா மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு இந்த பூங்கா சில ஆண்டுகளே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது பின்பு காலப்போக்கில் இப்படி ஒரு பூங்கா இருப்பதே இந்த பகுதி மக்கள் மறக்கும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
திருச்சி மாநகரின் முதன்முதலாக உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை மாநகராட்சி உடனடியாக கையில் எடுத்து சீரமைத்து மேம்படுத்தவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- என்.மணிகண்டன்
உங்கள் நகரத்திலிருந்து(Trichy)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.