ஹோம் /திருச்சி /

"பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு" திருச்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

"பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு" திருச்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

X
மாதிரி

மாதிரி படம்

Trichy protest | திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த வருடம் தமிழகஅரசு பொங்கல் பரிசாக ரொக்கப் பணம்1000 ரூபாய் மற்றும் பொங்கல்பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வருடா வருடம் கரும்பு விவசாயிகளிடம்கரும்புகொள்முதல் செய்யப்பட்டு நியாய விலை கடை மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இது தொடர்பாக அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

First published:

Tags: Agriculture, Farmers, Local News, Pongal Gift, Trichy