ஹோம் /திருச்சி /

காவேரி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்... விவசாயிகள் கோரிக்கை...

காவேரி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும்... விவசாயிகள் கோரிக்கை...

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Trichy | திருச்சி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணை விரைவில் அமைக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மழை காலங்களில் தண்ணீர் வீணாவதை தடுக்க காவிரி கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் குறைகளை மனுவாக அளித்தனர்.

இதில் பயிர்களை அழித்து வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், 566 டிஎம்சி காவிரி நீர் கடலுக்கு சென்று வீணாகி உள்ளது. இதனை சேமித்து வைக்க காவிரி கொள்ளிடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

இதையும் படிங்க : ஹீலியம் சிலிண்டர் விபத்து: சிறுவனின் மேல் சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

மழை வெள்ளத்தால் முசிறி பகுதிகளில் அழிந்து போன பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் தோட்டக்கலை துறை மேலாண்மை பொறியியல் துறை ஆதிதிராவிட நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு வரும் உதவிகளை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க உதவ வேண்டும் என்றும் முன் வைத்தனர்.

மேலும் காவிரி கிளை வாய்க்கால்களுக்கு வலது கரையில் உள்ள எலமனூர், கொடியாலம், அம்மன்குடி மற்றும் இடது கரையோரம் காட்டுப்புத்தூர் நத்தம் ஆகிய விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்க நிரந்தர குரம்பு அமைத்து தர வேண்டும் என்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Trichy